4 மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து... உள்ளே சிக்கியுள்ள சிறுவர்கள் உற்பட 12 பேரை மீட்கும் செயற்பாடுகளில் தீயணைப்பு படையினர்.

 கிரிபத்கொடை நகரிலுள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


அதற்குள் சிக்கியுள்ள 12 பேரை மீட்கும் செயற்பாடுகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


அந்த 12 பேரில், சிறுவர்கள் நால்வரும் அடங்குகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பற்றியமைக்கான உடனடி காரணங்கள் எவையும் வெளியாகவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


அதற்கு முன்னதாக, அந்த கட்டடத்துக்குள் சிக்கியிருப்போதை பத்திரமாய் வெளியில் கொண்டுவரும் முயற்சிகளில், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்