இலங்கையிலிருந்து செல்லும் இடைமாறல் பயணிகளுக்கான தடையை ஐ.அ.இ நீக்கியது!


இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், உகண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்துவரும் தகுதியான இடைமாறல் (transit) விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை (05) முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.


அதற்கமைய, நாளை முதல் மேற்படி நாடுகளிலிருந்து வருகைதரும் இடைமாறல் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக பயணிக்கப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்