வானிலை அதிகாரி சாலிஹீன் கலாநிதிப் பட்டம் பெற்றார்.


 



அம்பாறை மாவட்டம் நிந்தவூரைச் சேர்ந்த சிரேஸ்ட வானிலை அதிகாரி தேசமானிய மொஹமட் சாலிஹீன் இந்தியாவின் Diocese of Asia நிறுவனத்தினால் சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்கான கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தில் சிரேஸ்ட வானிலை அதிகாரியான இவர் இத் திணைக்களத்தின் ரேடார் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும்   கடமை புரிகின்றார்


அகில இலங்கை சமாதான நீதவானாகிய இவர், மனித உரிமைகளுக்கான சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் செயலாளர் நாயகமுமாகவும் மேலும் பல சமூக அமைப்புகளிலும் இணைந்து செயலாற்றுகின்றார். இவைகளுக்காக பல்வேறு வகையான விருதுகளும் பெற்றுள்ளார்.


நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை மற்றும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைகளின் பழைய மாணவரான இவர் நிந்தவூர் அப்துல் மஜீத், சித்தி உம்மா ஆகியோரின் புதல்வருமாவார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்