ஈரானின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள இப்ராஹீம் ரஈஸியை இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் நேற்று (06) தெஹ்ரானிலுள்ள பாராளுமன்ற உயர் சபையில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
சில மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலவரம் மற்றும் இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் சுமார் 60 வருடகாலமாக இருந்து வருகின்ற இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வாழ்த்துச்செய்தியை இதன்போது புதிய ஜனாதிபதிக்கு கையளித்த பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பும் விடுத்தார்.
மேலும் ஈரானின் புதிய ஜனாதிபதியை சந்தித்த முதல் வெளிநாட்டு பிரதிநிதி இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்