பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுத்தீன் பிணையில் விடுதலை.

ADMIN
0


ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி ,தலா இரண்டு 50 இலட்சம் ரூபா பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் இதேவேளை, தமது வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினி மரணத்தமை தொடர்பிலும் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default