பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போதுமானது – வைத்தியர் அசேல குணவர்தன.

ADMIN
0


பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


பாடசாலை மாணவர்களின் நோயெதிர்ப்பு சக்திக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நேற்று (08) இடம்பெற்ற கொவிட் ஒழிப்பிற்கான விசேட செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 32.69 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default