அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி தலைமறைவு.
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி காயங்களுடன் தலைமறைவாக உள்ளதாவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் எரிபொருள் ஏற்றுவதற்காக சென்ற கொள்கலன் வாகனமொன்றே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதி நித்திரை கலக்கத்தினால் அல்லது போதையில் இருந்திருக்காலாமெனவும் பொலிசார் திரிவிக்கின்றனர்
கந்தளாய் குளத்தின் வான்பாலத்தின் அருகில்லுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 கருத்துகள்