போராட்ட களத்தில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு


தெனியாய பிரதேசத்தில் இன்று (09) இடம்பெற்ற ஆசிரியா் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக  செய்தியாளா் தெரிவித்தாா்.


குறித்த ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே உயிரிழந்துள்ளாா்.


28 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாாினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்