கொவிட் பரவலை விரிவுபடுத்தும் பணியில் எதிர்க்கட்சியினர் - அமைச்சர் கெஹலிய

ADMIN
0



நாட்டின் தற்போதுள்ள முக்கிய பொறுப்புகளையும் தேவைகளையும் புறக்கணித்துவிட்டு கொவிட்-19 நோயை விரிவுபடுத்தும் பணியில் எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


எதிர்கட்சிகளினது போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அமைச்சர், கொவிட் நோயை ஒடுக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.


நேற்று (19) கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், இந்நாட்டில் சுமார் 75% மக்கள் தற்போது தடுப்பூசி போடப்பட்டுள்ளனரெனவும் உலகில் மூன்று அல்லது நான்கு நாடுகள் மட்டுமே இந்த எல்லையைத் தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த நேரத்தில், கொவிட்19 நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தினார் .


கொவிட்19 நோயை விரிவுபடுத்தும் நோக்கில் போராட்டங்களை நடத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாதென்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.


எம்.ஏ. அமீனுல்லா

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default