சன்ஷைன் சுத்தாவை படுகொலை செய்த நபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!



சன்ஷைன் சுத்தா கொலை கடந்த செப்டம்பர் 04ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சன்ஷைன் சுத்தா என்ற அமில பிரசன்ன ஹெட்டிஹேவாவின் கொலையின் பிரதான சந்தேகநபர் இன்று (26) அதிகாலை களுத்துறையில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட டின்கர் லசந்த எனப்படும் ஹேவாலுனுவிலகே லசந்த எனும் சந்தேக நபர் மேலும் பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.


களுத்துறை, தியகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் காட்ட முற்பட்ட வேளையில், பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.


பின்னர் பொலிஸார் மேற்கொண்ட எதிர் தாக்குதலில் அவர் காயமடைந்தது பலியானார். இச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.


நன்றி - (யாழ் நியூஸ்)

கருத்துரையிடுக

0 கருத்துகள்