இலங்கைக்கு 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி

ADMIN
0 minute read
0

 


இந்து சமுத்திரத்தில் நட்பு நாடாக இந்தியா நீண்ட காலமாக தொடர வேண்டுமாக இருந்தால், தவணை அடிப்படையிலான 10 பில்லியன் டொலரை ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு இந்தியா வழங்க வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


தனது ட்விட்டரில் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இல்லையென்றால், சீனாவிற்கு மற்றுமொரு இளைய பங்காளர் கிடைக்கும் நிலை ஏற்படும் என சுப்பிரமணியன் சுவாமி இந்திய பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பல்வேறு சர்வதேச கொள்கைகளில் மோடி அரசாங்கம் தோல்வியுற்றுள்ளதாகவும் அந்த நிலைமை இலங்கை விடயத்திலும் தொடர அனுமதிக்கக்கூடாது எனவும் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

To Top