கொவிட் தொற்றால் 28 பேர் பலி!

ADMIN
0




நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,533 ஆக அதிகரித்துள்ளது.


*இன்று இதுவரையில் 757 பேருக்கு கொரோனா!*


இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்வடைந்துள்ளது.


சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.


இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 569,928 ஆக அதிகரித்துள்ளது.


இவர்களில் 11,928 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,467 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default