வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம்

ADMIN
0



சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் இது வெளியிடப்பட்டது.

மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாகக் காணப்பட்ட தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து வட அகலாங்கு 13.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.4E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.

அது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது டிசம்பர் 4ஆம் திகதி காலையளவில் வட ஆந்திரப் பிரதேசம் மற்றும் தென் ஒடிஷா கரையை அண்டிய மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். R

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default