சதொசவில் அத்தியாவசிய உணவு பொருட்கள் நிவாரண விலைக்கு


பண்டிகை காலப் பகுதியில் சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.


அத்துடன், சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விசேட பொதியில் சீனி கொள்வனவு செய்யாத நுகர்வோருக்கு, மேலதிகமாக 2 கிலோகிராம் அரிசியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் உள்ள சதொச நிலையங்களில் நாளை (27) முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


130 ரூபா விதம் 10 கிலோகிராம் சம்பா அரிசியை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்