ரயில் நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

ADMIN
0


இடமாற்றம் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி, எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


இந்த பிரச்சினைகள் தொடர்பில், ரயில் திணைக்களப் பொது முகாமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

எனினும், தங்களது பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில், பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்கான உரிய வேலைத்திட்டம் இல்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default