‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது – அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள்’ – எஸ்.பி.திஸாநாயக்க


தாம் வாங்கிய லிட்ரோ எரிவாயு சிலிண்டரிலும் கசிவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அந்நிறுவனத் தலைவரிடம் தெரிவித்தபோது, ​​சோப்பு நுரை சோதனை சரியில்லை என்றும், ஒவ்வொரு சிலிண்டரிலும் சிறு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது மக்களின் அச்சத்தை போக்காது என்பதால் அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் ஒவ்வொன்றாக பரிசோதிக்க வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க கூறினார்

மேலும் எரிவாயு மையங்களில் கசியும் எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற மறுப்பதாகவும் எனவே இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்