கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவளை மாநகர சபை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிக்காவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் 16 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment