இலங்கையில் வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி ஆகிய கரையோர பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த சடலங்கள் இன்று முற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்ட இருவரும் ஆண்கள் என தெரியவருகின்றது.
மேலும் தலை இல்லாது காணப்படும் இந்த சடலங்கள், முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment