கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின் போது, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment