முட்டை வீச்சு: தந்தை, மகளுக்கு விளக்கமறியல்

ADMIN
0 minute read
0


கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சமன் அபேகுணவர்தன மற்றும் மாநகர சபை உறுப்பினர் சுரேகா அபேகுணவர்தன ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் புத்திக ஸ்ரீ ராகல, இன்று (02) உத்தரவு பிறப்பித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் பிரதீப் ஜயவர்தனவை மிளகாய்த் தூள் கலந்த கூழ் முட்டையால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரும் தந்தையும் மகளும் என்பது குறிப்பிட்டத்தக்கது.
To Top