லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையை அதிகரித்தாலும், சிபெட்கோ எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்திருப்பினும், இலங்கை பெட்ரோலியகூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லையென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
எரிபொருள் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
0 Comments: