சபையில் நிதியமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

ADMIN
0 minute read
0


யுத்த காலத்தில் ராஜபக்ஷ அரசாங்கம், வடகொரியாவிடம் இருந்து கறுப்புப் பணத்தைப்
பயன்படுத்தி ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்து சர்வதேச ரீதியில்
நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்
தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதுதொடர்பில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த
வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பிடகோட்டயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சரின் இந்த கூற்று காரணமாக சர்வதேச அமைப்புகளின் ஆதரவு
அரசாங்கத்துக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் கேள்வியெழுப்பினார்.
கறுப்புப் பணத்தை ஆயுதம் வாங்க ஏன் அரசாங்கம் பயன்படுத்தியது என்பதை
பாராளுமன்றத்தில் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)