Headlines
Loading...
நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கான காரணம்

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமைக்கான காரணம்

 




கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். 


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அத்துடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் அதிகரிப்பை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம் பதிவான இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு முழுமையாக தடுப்பு செலுத்திக் கொள்ளாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments: