ஞாயிறு தாக்குதல் - 25 சந்தேக நபர்களுக்கு எதிராக மே 12 விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகை மே 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌபர் என்ற நௌபர் மௌலவி உட்பட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் அன்றைய தினம் வரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments: