பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டுத் தாக்குதல் : 30 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த மசூதிக்குள் இரண்டு தாக்குதல்காரர்கள் நுழைய முயன்ற நிலையில், காவலுக்கு நின்ற பொலிஸார் இருவரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.
மற்றைய அதிகாரி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, பள்ளிவாசலுக்குள் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments: