இலங்கையில் 317 மத்ரஸாக்களே முஸ்லிம் திணைக்களத்தில் பதிவு : பதிவேட்டிலுள்ள சரியான தரவுகள் இதுவே என்கிறார் பணிப்பாளர்
இலங்கையில் 317 பதிவு செய்யப்பட்ட மத்ரஸாக்கள் (அரபுக் கல்லூரிகள்) இருப்பதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
A
அதேபோன்று 132 மத்ரஸாக்கள் (அரபுக் கல்லூரிகள்) பதிவு செய்யப்படாமல் இருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டு இயங்கு நிலையில் இல்லாத 32 மத்ரஸாக்கள் இருப்பதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.
இதுவே திணைக்களத்தின் பதிவேட்டிலுள்ள சரியான தரவுகள் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் 1,700 மத்ரஸாக்கள் இருப்பதாகவும் அதில் 317 மத்ரஸாக்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட விடயத்தை அவர் நிராகரித்துள்ளார்.
0 Comments: