இலங்கைக்கு இந்தோனேஷியா 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கியுள்ளது

 
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு இந்தோனேஷியா வழங்கியுள்ளது.


மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேஷியாவின் தூதுவர் Dewi Gustina Tobing தெரிவித்துள்ளார்.


அதற்கமைய குறித்த பொருட்கள் எதிர்வரும் 28 மற்றும் மே 8ஆம் திகதிகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஊடாக இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags