
ceylonnews
இந்தியக் கடன் முடிவடைகிறது; புதிய கடனுக்கான எந்த அறிகுறியும் இல்லை -ரணில்
இந்தியாவிடமிருந்து பெற்ற கடன் மே மாதத்து டன் முடிவடையும் என்றும் புதிய கடன் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும் சூழ்நிலை உருவாகலாம் என்றார்.
மேலும், தற்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியை ஒத்திவைக்க வாய்ப்பில்லை எனவும், பாராளுமன்றம் நிதி அதிகாரத்தைப் பெற்று அனைவரின் கருத்துகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.