சவர்க்காரத்தின் விலைகளும் அதிகரிப்பு..

 


நாட்டில் சவர்க்காரங்களின் விலைகளை சடுதியாக அதிகரிக்க சவர்க்கார இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.


அதற்கமைய , 70 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட ஆடைகளைக் கழுவும்  சவர்க்காரம் வகையொன்றின் விலை  115 ரூபாய் தொடக்கம் 150  ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளுக்கான  சவர்க்காரம்  175 ரூபாயாகவும் வாசனை  சவர்க்காரம் 145 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


மேலும் அத்துடன் இந்த விலை அதிகரிப்புடன் சலவைத் தூள்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஷெம்போ மற்றும் பற்தூரிகை (Toothbrush) என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.