எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டிற்கு...

 


எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இந்த வாரத்திற்குள் இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதன்படி நாளை(26) 3,600 மெட்ரிக் தொன் எரிவாயு மேலும் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை மறுதினம்(27) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.


மேலும் நாளை(26) கொண்டுவரப்படும் எரிவாயு தொகையை நாளை மறுதினம்(27) முதல் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.