சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 
இதன்படி ,எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது.


எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின் விலைகளை அதிகரிக்குமாறு சிற்றுணவக உரிமையாளர்களிடம் கோருவதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


இதனை விடவும் விலையை அதிகரிக்க வேண்டாம்.


மேலும், வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என சிற்றுணவக உரிமையாளர் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.