அமைதியின்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு!


நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது என  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது


நிட்டம்புவ பகுதியில் மூவரும், வீரக்கெட்டிய பகுதியில் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.