எரிபொருள் விநியோகம் மீண்டும் வழமைக்கு


நாடளாவிய ரீதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.