எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு – வலுசக்தி அமைச்சர்

புகையிரதம், அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


அத்துடன், சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் விநியோக பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதனால் துரிதகதியில் இடம்பெறும் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்படுவதாக அமைச்சர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.