ஜோன்ஸ்டன் வீட்டில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் மக்களால் மீட்பு...

 


சமீபத்தில் ஏற்பட்ட போராட்டத்தை அடுத்து மக்கள் பல வீடுகளை சூறையாடினர்.


இதன்படி வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்தின் வீட்டில் இருந்து 400 யூரியா உர மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அதற்கமைய கண்டெடுக்கப்பட்ட உர மூட்டைகள் அனைத்தும் போராட்டக்காரர்களால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.


குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் 80 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டிலும் 60 எரிவாயு சிலிண்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.