அலி சப்ரி ரஹீம் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் மகிழுந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலாவி-கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் அந்த காரில் பயணித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டு நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


நன்றி - தமிழன் இணையம்.