”பொலிஸாரின் வீடுகளைத் தாக்குங்கள்” - கட்டளையிட்ட முன்னாள் இராணுவ அதிகாரி கைதுஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் அத்தனகல்லை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.