மீண்டும் ஊரடங்கு உத்தரவு!


பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் விதிகளுக்கு அமைய இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.


அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் தவிர, பொது சாலை, ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்த பொது கடற்கரையிலும் யாரும் தங்க முடியாது .