ஶ்ரீ லங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்த வேண்டும் ; பிரதமர் யோசனை


ஶ்ரீ லங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்த வேண்டும் 

என பிரதமர் யோசனை ‘முன்வைத்தார்.


நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்திய அவர் ,


தொடர்ந்து நட்டத்தினை சந்தித்து வரும் ஶ்ரீ லங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்த வேண்டும் என நான் யோசனை முன்வைக்கிறேன்.


2021 ஆம் ஆண்டு மாத்திரம் ஶ்ரீ லங்கன் 4500 கோடி ரூபா நட்டம் அடைந்துள்ளது.2021 மார்ச் மாதம் வரை அந்த நிறுவனம் சந்தித்துள்ள மொத்த நட்டம் 37200 கோடி ரூபாவாகும்.


வாழ்க்கையில் விமானத்தில் கால் வைக்காத குடிமகனும் ஶ்ரீ லங்கன் விமான சேவை நட்டத்தில் பங்கெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.