நாடு இயல்பு நிலைக்கு திரும்பவும், எல்லோரும் நிம்மதியாக வாழவும் இந்த புனித தினத்தில் பிராத்திப்போம் : எச்.எம்.எம். ஹரீஸ் எம்.பி !


மாளிகைக்காடு நிருபர்


பாவங்கள், தீயன விலக்கி நல்லமல்களினால் நாம் இறைவனுடன் தொடர்புபட்ட ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான புனித ரமழானை அடைந்து இன்று நோன்புப்பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சகலரும் தேக ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் வாழ இறைவன் துணைபுரிய பிராத்திக்கிறேன். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் தளம்பல்கள் காரணமாக பல்வேறு முரண்பாடுகளுடன் இந்த புனிதமிகு காலத்திலும் கஷ்டத்தை அனுபவிக்கும் எமது சகோதரர்களுக்கும் பல்வேறு காரணங்களினாலும் துயருற்றிருக்கும் அனைவருக்கும் இறைவன் நல்ல சுகத்தையும், பறக்கத்தையும் வழங்கிட எல்லோரும் கையேந்தி பிராத்திப்போம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


அந்த அறிக்கையில் மேலும், இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே இந்த காலகட்டத்தில் ஒற்றுமை புரிந்துணர்வு நிலையாக ஏற்பட வேண்டும் எனவும் சகலருக்கும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை அமைய இத்திருநாளில் முஸ்லிம்கள் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் அல்லாஹ்வை முன்னிறுத்தி பல தியாகங்களைச் செய்து 30 நாட்கள் நோன்பிருந்து இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.


இஸ்லாம் சமாதானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றது. அதற்கான நாளாக இன்றைய தினத்தை அமைத்துக் கொள்வோம். என்பதுடன் உலகை அச்சுறுத்தும் சகல தீங்குகளிலிருந்தும் எம்மை காக்க சகலரும் துஆ செய்வோம். நிலையானதும், ஸ்திரமானதுமான பொருளாதாரத்தை இலங்கை தேசம் அடைந்து முன்னேற்ற பாதைக்கு எமது நாட்டை கொண்டுசெல்ல இறைவனிடம் நாம் கையேந்தி பிராத்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.