புத்தளத்தில் கடும் மழை : ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு


இன்று பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5,791 குடும்பங்களைச் சேர்ந்த 20,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


இன்று நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 600 மாணவர்கள் பரீட்சை எழுதுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

இதேவேளை, புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட புத்தளம் – மன்னார் வீதி, கடையார்குளம், நூர் நகர் உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளும், புத்தளம் பிரதேச சபைக்கு உட்பட்ட ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி மற்றும் பாலாவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் வெள்ளநீர் புகுந்தமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.