வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!


அத்தியாவசியமற்ற பொது சேவைகளுக்காக எதிர்வரும் 07 ஆம் திகதி வைத்தியசாலைகளுக்கு வருகை தருவதனை தவிர்த்துக்கொள்ளமாறு சுகாதார தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.


எதிர்வரும் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 07 ஆம் திகதி வைத்தியர்கள் தவிர்ந்த சுகாதார சேவையின் அனைத்து பணியாளர்களும் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு நடவடிக்ககையினை மேற்கொள்ளவுள்ளனர்.

 

இதற்கமைய, எதிர்வரும் 07 ஆம் திகதி காலை 7.00 முதல் தொடர்ச்சியாக 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது