வன்முறையை தூண்டும் வகையில் செயற்படவேண்டாம் - பிரதமர்

 
பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இந்த வேளையில் பொது மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வன்முறையானது வன்முறையையே உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், மக்களை நிதானத்துடன் செயற்படுமாறு   வலியுறுத்தியுள்ளார்.


இதன்படி பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.


அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் செயற்படவேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நடப்பு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்