எரிபொருள் விலையில் அதிகரிப்பு இல்லை! - லங்கா ஐஓசி


தமது நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ.ஓ.சி அறிவித்துள்ளது. 


இன்று (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையை அதிகரிப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த விடயம் தொடர்பில், விளக்கமளித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பான எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.