இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகுகிறார் சவேந்திர சில்வா, புதிதாக வருகிறார் விகும் லியனகே
ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை விட்டு விலகுகிறார்.இதனையடுத்து 2022 ஜூன் முதலாம் திகதியன்று பாதுகாப்புப் படைகளின் புதிய பிரதானி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அவர் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக செயற்பட்டு வருகிறார்.இந்தநிலையில் தற்போதைய படைகளின் பிரதானியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே தனது பதவியை விட்டு விலகிய பின்னர், ஜூன் முதலாம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாகயும் கடமையாற்றினார்.

இராணுவத்தின் 58வது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் படைகளின் தலைமையதிகாரியாக பதவியேற்றார்.