பாதுகாப்பு தாருங்கள் : இந்திய பிரதமரிடம் முன்னாள் அமைச்சர் கோரிக்கை!


தம்மையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவிற்கு பாதுகாப்புக்காக அழைத்துச் சென்று பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் தாம் திருப்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தான் அரசியலில் இருந்து ஒரு ரூபா கூட சம்பாதிக்கவில்லை என்றும், தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் வன்முறைக் கும்பலால் முற்றாக எரிக்கப்பட்டதால் இன்று இந்த நாட்டில் வீடற்ற மனிதனாக தான் மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.