துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம், CID இற்கு உத்தரவு


துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம்

 குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.


துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் செயற்பாட்டை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே தற்போது அவரை கைது செய்யுமாறும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.