பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 173 சிறைக் கைதிகள் விடுதலை!


பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 173 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


அதனடிப்படையில், குருவிட்டை, மஹர, நீர்கொழும்பு, வாரியபொல, போகம்பறை, அநுராதபுரம், களுத்துறை, கொழும்பு - மகசீன், தல்தென, வட்டரெக, பதுளை, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ, பொலனறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேன, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல, திருகோணமலை மற்றும் வீரவில ஆகிய சிறைச்சாலைகளின் கைதிகளே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.