4 மாணவர்கள் நீரில் மூழ்கியதில் 2 பேர் சடலமாக மீட்பு!


வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று மதியம் 4 மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.


வவுனியாவை சேர்ந்த 15,16 வயதுகளையுடைய மாணவர்கள் இன்று மாலை ஈரட்டைபெரியகுளத்திற்கு சென்றுள்ளனர்.

 

4 மாணவர்களும் இணைந்து தமது வளர்ப்பு நாயை குளிர்ப்பாட்டி நீராடிக் கொண்டிருந்த சமயத்தில் 4 மாணவர்களும் நீரில் முழ்கியுள்ளனர்.


குறித்த நால்வரையும் மீட்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் இணைந்து அயலவர்களின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட சமயத்தில் மற்றைய இரு மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


சடலமாக மீட்கப்பட்ட இரு மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.