எரிவாயு விநியோகம் நிறுத்தம்; மீண்டும் ஜூன் 6 ஆரம்பம்

சமையல் எரிவாயு விநியோகம் இன்றுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (06) ஆரம்பிக்கப்படவுள்ளது.


இன்று சந்தைக்கு 16,000 எரிவாயு சிலிண்டர்களை மாத்திரமே விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், அதன் பின்னரே எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை, 15 நாட்களுக்கு ஒரு முறை, மசகு எண்ணெய் கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும்.


சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் உற்பத்தியை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.